நிச்சியம் சாதிக்க முடியும் (We can achieve anything!)

Standard

This post is by N. Santha, Prajnya Administrator. Santha expresses her faith that women can overcome any challenges that life throws at them, and hopes that the voices of Indian women will resound across the eight directions of the globe.

பெண்ணின் பெருமை

‘பெண் இன்றிப் பெருமையும் இல்லை கண் இன்றி காட்சியும் இல்லை’

      பெண் என்றாலே பெருமைதான். பெண் என்றாலே திறமைதான். பெண் என்றாலே வெற்றிதான். பல பல சாதனை புரிவோர் பெண்கள்.

பாரதப் பெண்களே நம் தேசத்தின் ஜீவநாதம். அந்த இனிய நாதம் எட்டுத் திக்கும் கேட்க நாம் ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும்.

‘நாம் ஆண்களுக்கு எந்த வகையிலும் சளைத்தவர்கள் இல்லை’ என்பதனை நிரூபிக்கும் வகையில் மண் முதல் விண் வரை சமூகத்தின் எத்துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை. என்ற அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளமையை நாம் இன்று காணக்கூடியதாக இருக்கின்றது.

பெண்கள் இன்றும் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.    (கொலை, கொள்ளை, பாலியல் ரீதியான துன்பங்கள், அடிமை தனம்) ஆண் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் பெண்களை வெளி கொண்டுவர வேண்டும். அவர்கள் தனக்கு நடக்கும்  கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும்.

தனக்கு நடக்கும் கொடுமைகளிடம் இருந்து விடுபட சுயமரியாதையோடும், துணிவோடும், தன்நம்பிக்கையோடும், தைரியத்தோடும், நேர்மையுடனும் விழிப்புணர்வோடும்பெண்கள் போராடினால் வாழ்கையில்  முழுமையான வெற்றி பெற முடியும். சாதனை புரிந்த பெண்களாக மாற முடியும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s