பிரக்ஞா பாலின சமத்துவம் குறித்த தேர்தல் பட்டியல்
சமுதாயத்தில் எல்லா நிலையிலும் ஆண் பெண் அனைவரும் சரிசமமாக இருந்தாலேயன்றி மக்களாட்சி என்பது முழுமை பெறாது. அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகள், வாக்காளர்கள் என அனைவரும் வன்கொடுமை, பிரதிநித்துவம், உரிமை முதலிய பாகுபாட்டு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு ஆண் பெண் இருவரையும் சமமாக உள்ளடக்கிய கொள்கைக்கு முக்கிய இடம் அளிக்கவேண்டும்.
அரசியல் கட்சிகளுக்கான பாலின சமத்துவத் தேர்தல் வழிமுறைகள்
வேட்பாளர் தேர்வின்போது பாலின சமத்துவத்தை ஆதாரமாக கொள்ளவேண்டும்.
- பெண் வேட்பாளர்களைபரிந்துரை செய்யஅனைத்து கட்சி உறுப்பினர்களையும் ஊக்குவிக்கவேண்டும்.
- ஒவ்வொரு தொகுதியிலும்வேட்பாளரை முடிவுசெய்யும் முன் பரிந்துரைப் பட்டியலில் ஆண் பெண் எண்ணிக்கை சமமாக இருக்கும்படி பட்டியலிட வேண்டும்.
- 2016, இவ்வருட தேர்தலில், கட்சி வேட்பாளர் பட்டியலில்ஆண் பெண் வேட்பாளர்களை ஏறத்தாழசமமான எண்ணிக்கையில் அறிவிக்க முன்வர வேண்டும்.
வேண்டாம், ஒருபோதும் பரிந்துரைக்க வேண்டாம்!
- பாலியல் கொடுமைக்காக குற்றம் சாட்டப்பட்டோரை நீதிமன்றம் விடுவிக்கும்வரை வேட்பாளராகஒருபோதும்பரிந்துரைக்க வேண்டாம்.
- பெண்களை இழிவாகபேசுவோரைவேட்பாளராக ஒருபோதும் பரிந்துரைக்க வேண்டாம்.
கட்சியின் தேர்தல் அறிக்கையில் பாலின சமத்துவத்திற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும்.
- தேர்தல் அறிக்கையில் பாலினசமத்துவத்திற்கு வெளிப்படையான ஆதரவு அளிக்க வேண்டும்.
- பாலியல் வன்முறைமற்றும் சொத்துரிமை, ஊதிய வேறுபாடு, சமமான வாய்ப்புமுதலிய பெண்களுக்கு எதிரான பாலியல் பாகுபாட்டுப் பிரச்சனைகளில், கட்சியின் நிலைப்பாட்டினைத் தெளிவாக விளக்க வேண்டும்.
- கட்சி மற்றும் அரசின் முக்கிய பதவி மற்றும் பொறுப்புகளில் பெண்களுக்குசமமான இடம் அளிக்க வேண்டும்.
பாலின சமத்துவத்திற்கு ஆதரவாக வாக்களியுங்கள்
எத்தகைய கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்…?
- பாலின வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கும் செயலுக்கும் இடமளிக்காத கட்சிக்கு வாக்களியுங்கள்.
- வேட்பாளர் தேர்வில் பாலின சமத்துவத்தை (முடிந்தவரையில்) கடைப்பிடிக்கும் கட்சிக்குவாக்களியுங்கள்.
- பெண் வேட்பாளர்களுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கும் கட்சிக்குவாக்களியுங்கள்.
- பாலின சமத்துவ கொள்கையில் தெளிவான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ள கட்சிக்குவாக்களியுங்கள்.
- பாலியல் பாகுபாட்டுப் பிரச்சனைகளில் உண்மையான அக்கறை கொண்டுள்ள கட்சிக்குவாக்களியுங்கள்.
இத்தேர்தலின் மூலம் ஒரு முழுமையான, உண்மையான மக்களாட்சியை உருவாக்குவோம்.
பாலின சமத்துவத்திற்கு வாக்களிப்போம்.