#Chennai #WomenMarch4Change: A Report

Standard

#Chennai #WomenMarch4Change

A Report by Sudaroli Ramasamy

 

This slideshow requires JavaScript.

The Women’s March for Change was held on April 4, 2019, following upon a nation-wide call for women across India from various walks of life and diverse social and economic backgrounds to protest collectively against diminishing democratic spaces for women as citizens. This march, led by women, proved to be a critical platform to articulate dissent in an environment that enables inequality and violence against women in the public spheres and places their fundamental rights as citizens of India in jeopardy.

All over India hundreds of women from 20 different states, including major cities like New Delhi, Chennai, Bangalore, Mumbai, voiced their protest against  gender-based violence and discrimination and the absence of safe spaces for women, and called upon people to exercise their franchise for change in the upcoming Lok Sabha elections. In Chennai,  organised under the leadership of Prajnya and Penn Thozhilalar Sangam, with the tremendous support and participation of  other organizations such as Roshni and Centre for Women’s  Development and Research, participants read an Open Letter to candidates in the Lok Sabha Elections, asserting their rights as citizens under the Indian Constitution. (The Open Letter is posted separately here in both English and Tamil.)

Two vans, with the banners of Women’s March for Change, set out from Triplicane by noon and traveled through the areas of Bharathi Nagar, Thuraipakkam, Shollinganallur, winding up the day’s protests at 8.30 pm in Perumbakkam (where displaced people are housed by the government). The march covered the suburban areas of Chennai in order to accommodate the women from peripheral urban locations, whose voices are otherwise unheard. At every location, protesters spoke about shrinking spaces for democratic participation and women’s discrimination, sang protest songs and signed the open letter demanding their constitutional rights be safeguarded.

More than  two hundred women participated in the march in Chennai.

***

மாற்றத்திற்கான பெண்கள் பேரணி: சென்னை அறிக்கை 

மாற்றம் எப்போது தேவைப்படுகிறது? மாற்றத்திற்கான தேவையை யார் முன்னெடுக்கிறார்கள்?  இதோ, அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் இங்கே!
 இந்திய குடிமக்களான,  தங்கள் மீதான  வெறுப்பு மற்றும்  வன்முறையும் மிகுந்து, இந்திய அரசியல் சாசனம் உறுதி செய்யும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் சூழலுக்கு எதிராய் குரலெழுப்ப தேசிய அளவில் பெண்களுக்கு விடப்பட்ட அறைகூவலே மாற்றத்திற்கான மகளிர் பேரணி! ஏப்ரல் 4ம் தேதி 2019 அன்று, நாட்டின்  பல்வேறு பகுதிகளில், பலதரப்பட்ட சமூக மற்றும் பொருளாதார பின்னணியை சார்ந்த பெண்கள், பல விதமான முறைகளில், தங்களுக்கான ஜனநாயக வெளி சுருங்குவதை எதிர்த்து ஆர்பரித்தனர்.
சென்னை, தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களை உள்ளடக்கி, மொத்தம் 20 மாநிலங்களில், பெண்கள் வழிநடத்தும் மாற்றத்திற்கான மகளிர் பேரணி பல்வேறு வழிகளில் உருவெடுத்தது. பெண்கள், தங்களுக்கு எதிரான பாலின வன்முறை மற்றும் பாகுபாட்டினால், சமுகத்தில் பெண்களின் பாதுகாப்பு நாளுக்கு நாள் சிதைப்படுவதை முன்னிறுத்தி கேள்வியெழுப்பினர். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், இத்தகைய சூழல் மற்றும் அதை சார்ந்த கேள்விகளுக்கு, விடை கிட்டும் வண்ணம் தங்களது வாக்குரிமையை ஜனநாயகத்தை  முழுதாய் கொணரும் ஆயுதமாக்கிடும்படி பொது மக்களிடம் வலியுறுத்தினர்.
சென்னையில், பிரக்ஞா, பெண் தொழிலாளர்கள் சங்கம் ஆகிய பெண்கள் அமைப்புகளின் தலைமையில், ரோஷ்னி மற்றும் பெண்கள் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CWDR) ஆகியோரின் ஆதரவால் இந்த பேரணி நடைபெற்றது. குடிமக்களாக தங்கள் உரிமைகளை உறுதிசெய்யும் வண்ணம், பாராளுமன்ற வேட்பாளருக்கு தாயரிக்கப்பட்ட திறந்த மடலை, நிகழ்வில் கலந்து கொண்ட பெண்கள் வாசித்தனர்.
மாற்றத்திற்கான மகளிர் பேரணியை அறிவிக்கும் பேனர்களை தாங்கிய இரண்டு நான்கு சக்கர ஊர்திகளில் (Van) திருவல்லிக்கேணியிலிருந்து காலையில் புறப்பட்டு, பாரதி நகர், துரைபாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக முடிவினில் பெரும்பாக்கத்தில் ( அரசினால் கட்டாய இடம் பெயர்வுக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு பகுதி)  இரவு 8.30 மணியளவில் இந்த பரப்புரை முடிவுற்றது.  சென்னையின் புறநகர  பெண்களை  சென்றடைந்ததன் மூலம், ஒலிக்கபடாத அப்பெண்களின் குரல்கள் ஓங்கியதே, இந்த பரப்புரையின் முக்கியத்துவம் எனலாம். ஒவ்வொரு இடங்களிலும், ஜனநாயக பங்கேற்பிற்கான வெளி சுருங்குவதையும், பெண்கள் பாகுபடுத்தப்பதுவதை பற்றி விவாதித்தும், போராட்ட பாடல்கள் பாடியும், அரசியல் சாசனம் உறுதிசெய்யும் தங்களது உரிமைகளை காத்திட கோரும் திறந்த மடலில் கையொப்பமிட்டும், போராட்டகாரர்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.
இருநூற்றுக்கு மேலான பெண்களை சென்றடைந்த நிறைவினை  சுமந்து, இனிதே முடிவுற்றது  மாற்றத்திற்கான மகளிர் பேரணி.
***

Sujata Mody, Penn Thozhilalar Sangam, tweeted about the march, and you can link to the thread of tweets here.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s